விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் மீது மக்கள் சேற்றை வாரி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம் பகுதியில் கரையை கடந்த நிலையில் பல இடங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் அவர் பார்வையிட சென்றபோது, உதவிகள் சரியாக கிடைக்கப்பெறாததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆத்திரத்தில் மேலும் சிலர் சேற்றை வாரி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. பின்னர் அப்பகுதியை பார்வையிட்ட பின் அமைச்சர் பொன்முடி மற்ற கிராமங்களை பார்வையிட புறப்பட்டு சென்றார்.
Edit by Prasanth.K