பாலிடெக்னிக் சேர்க்கை இரு மடங்காக அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி தகவல்..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:43 IST)
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரி படிப்புக்கு செல்வதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நான் பாலிடெக்னிக் சேர்க்க இருமடங்காக அதிகரித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 
அதிமுக ஆட்சி இருந்த கடந்த 10 ஆண்டுகளில் பாலிடெக்னிக் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை இருமடங்காக உயர்ந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் நாள் முதல்வன், புதுமைப் பண்பு போன்ற திட்டங்களால் மாணவர் சேர்க்கை 1.20 லட்சம் உயர்ந்துள்ளது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்