இதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருக்க தயார்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (22:58 IST)
நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா அறிவித்த இலவச திட்டங்களை தவறு என படத்தில் கூறாமல், நேரடியாக பொதுமக்களிடம் கூறிவிட்டு விஜய் வீதியில் நடந்து சென்றுவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை விஜய் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்