தமிழகத்தில் 120 புதிய உழவர் சந்தைகள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

வெள்ளி, 30 ஜூலை 2021 (16:31 IST)
தமிழகத்தில் 120 புதிய உழவர் சந்தைகள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் புதிதாக 120 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் பேட்டியளித்துள்ளார் 
 
திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன என்பது உழவர்கள் நேரடியாக இந்த சந்தையில் தங்களது விளை பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உழவர்களுக்கு தகுந்த விலை கிடைப்பதோடு பொதுமக்களுக்கு குறைவான விலையில் காய்கறிகள் கிடைத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்த நிலையில் உழவர் சந்தைகளை நவீனமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று பேட்டியளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் 120 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்