டெடி இயக்குனரோடு மீண்டும் இணையும் ஆர்யா!

வெள்ளி, 30 ஜூலை 2021 (10:34 IST)
நடிகர் ஆர்யா சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக அமைந்தது. இந்த படம் ஒரு ஸ்லீப்பர் ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஆர்யாவின் சார்பட்டா திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மீண்டும் இந்த கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாம். அதற்கான பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்