பாடகர் கிரிஷ் செய்த ஆர்வக்கோளாறு செயல்… அதிர்ச்சியில் விஜய் தரப்பு!

வியாழன், 29 ஜூலை 2021 (15:34 IST)
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில் இயக்குனர் வம்சியுடன் இருக்கும் தன்னுடையப் புகைப்படத்தை வெளியிட்ட பாடகர் கிரிஷ் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துகள் எனக் கூறினார். ஆனால் உடனே அந்த டிவீட்டை நீக்கினார். இந்நிலையில் ஆர்வக்கோளாறாக இதுபோல டிவீட் போட்ட வெளியிட்டதால் கிரிஷ் மேல் விஜய் தரப்பு கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்