தமிழக சட்டமன்றத்துக்கு என கட்டப்பட்ட ஓமந்தூரார் கட்டிடம் ஜெயலலிதா ஆட்சியின் போது திடீரென மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியபோது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றால் வயிறு எரிகிறது என்றும் அற்புதமான கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றி உள்ளனர் என்றும் ஆட்சி அமைந்ததும் மருத்துவமனையை மாற்றிவிடுவார்கள் என்றனர் என்றும் ஆனால் புற்றுநோய் சிகிச்சை மையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
ஓமந்தூரார் மருத்துவமனையில் 40 சதவீத இடங்கள் மட்டுமே மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர் சுப்பிரமணியன் தற்போதைய சட்டமன்றத்தில் இடநெருக்கடி உள்ளது என்றும் அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடநெருக்கடியால் தவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்
இதனை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை ஒருவேளை சட்டமன்றம் ஆக மாற்றப்படுமா? என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது