சசிகலா விஷயத்தில் தலைமையின் நிலைபாடு என்ன?

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (17:54 IST)
சசிகலா விஷயத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.    
 
சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவில் இணைந்து செயல்படுவார் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.  
இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, சசிகலா சட்டத்தின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வரும் வாய்ப்பு குறைவு. சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவில் ஒரு போதும் அவருக்கு வாய்ப்பு இல்லை. முழுவதுமாக கடை சாத்தப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். 
 
இவரைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் ஜெயகுமார், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும். அவரை பற்றிய நிலைப்பாட்டில் அதிமுகவில்  எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்