திருவள்ளுவரை திமுக உறுப்பினர்னு நினைச்சிட்டாங்க போல..! – அதிமுகவை கலாய்த்த அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (13:08 IST)
திருவள்ளுவரை அதிமுகவினர் திமுக உறுப்பினர் என நினைத்துவிட்டதால்தான் திருவள்ளுவருக்கு போதிய அங்கீகாரம் அளிக்காததாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் புனரமைக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “அதிமுகவிற்கு திருவள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை. அவரை திமுக உறுப்பினர் என்றே நினைக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்தும் திருவள்ளுவர் படம் நீக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் விரைவில் புனரமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்