இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தபோது, தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்றும் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் அதை மீறி மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது என்றும் எனவே கர்நாடக அரசியல்வாதிகள் நிதி ஒதுக்கியதையோ அல்லது ஆவேசமாக பேசுவதையோ கருத்தில் கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.