தமிழகம் முழுவதும் பொதுமக்களில் பலர் டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வரும் நிலையில் எனக்கு டெங்கு இல்லாதது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும், டெங்கு என்னை பாதிக்காததால் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் அவர் டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
டெங்குவால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் தங்களை புகழ்ந்து கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. திண்டுக்கல் சீனிவாசனுக்கு டெங்கு வரவில்லை என்பதற்கு சுகாதார அமைச்சர் காரணம் என்றால் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு டெங்கு வந்ததற்கு யார் காரணம் என பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்