விருதுநகரில் டெங்கு நுழைந்து விடுமா?- ராஜேந்திர பாலாஜி சவால்

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (13:49 IST)
கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. கொசுக்களால் உருவாகும் இந்த காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்துள்ளனர். ஒருபுறம், டெங்குவை ஒழிக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் புகார் கூறி வருகின்றன.




 



இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விருதுநகர் மாவட்டத்துக்குள் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும், விருதுநகரில் டெங்கு காய்ச்சலை நுழையவிடமாட்டோம் என்றும் அதற்குரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்