நிலவேம்பு கசாயம் கொடுத்த விஜயகாந்த் மச்சான் மீது வழக்குப்பதிவு

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:22 IST)
கடந்த சில நாட்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் ஆளும் கட்சியினர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படும் நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளரும், விஜயகாந்த் மனைவியின் சகோதரருமான சுதீஷ் மீது தமிழக அரசு திடீரென வழக்குப்பதிவு செய்துள்ளது.



 
 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி தினந்தோறும் உயிர்கள் பலியாகி வருவதை அடுத்து அரசும், தனியார் சமூக அமைப்புகளும், நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பொதுமக்களுக்கு அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ததாக சுதீஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் கோவை காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இந்த வழக்கை சட்டப்படி தேமுதிக சந்திக்கும் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.,
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்