கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் இதன் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பொது சுகாதாரத் துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு பள்ளிகளை மூடுமாறு எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்றும், ஊரடங்கு உத்தரவை நீடிக்கும்போது மருத்துவ ஆலோசகர்களை தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது