சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதன்படி சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையே 21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூபாய் 9928.33 கோடி மதிப்பில் 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே மெரினா முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரஒ மெட்ரோ ரயில் அமைப்பது அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.