அடித்து வெளுக்கும் கன மழை! – தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (10:23 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியிருந்தாலும் தொடக்கமே நல்ல மழையை சந்தித்து வருகிறது தமிழகம். நேற்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகள் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மரங்கள், சுற்று சுவர்கள் பெயர்ந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி பகுதிகளில் நேற்று பரவலான மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்