தமிழகம் மற்றும் புதுவையில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்நிலையில் இந்த சூழலை பயன்படுத்தி நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் ஆரம்பித்த வேகத்திலேயே பல்பு வாங்கி கைவிடப்பட்ட அந்த திட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதன் பின்னர் செல்லூர் ராஜூவின் தெர்மாக்கோல் திட்டத்தை கலாய்க்கு மீம்ஸ்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கியது. தாற்போது செல்லூர் ராஜூ என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தெர்மாக்கோல் திட்டம் தான்.
இந்நிலையில் அவரை கலாய்க்கும் விதமாக அவர் 12-ஆம் வகுப்பு தேர்வு 1200 மதிப்பெண்களுக்கு 1225 அதாவது கூடுதலாக 25 மதிப்பெண் பெற்றதாக ஃபேஸ்புக்கில் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் உள்ள மதிப்பெண் விவரங்கள் மொழிப்பாடம்- 201. ஆங்கிலம்- 200. இயற்பியல்- 201. வேதியியல்- 250. உயிரியலில் 164. கணிதத்தில் 209 மதிப்பெண்களும் என 1200-க்கு 1225 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என கலாத்துள்ளார். இது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.