
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகள், அலுவலகங்களுக்கு ரகசிய இமெயில் மூலமாக வெடிக்குண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆனாலும் காவல்துறையினர் உடனடியாக வெடிக்குண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர்களது வீடுகளில் காவல்துறையினர் மோப்பநாய்கள், வெடிக்குண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர். அதில் அந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது. அதேபோல சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K