ரஜினிகாந்தை சீரியசா எடுத்துக்கொள்ள வேண்டாம்: வைகோ பேட்டி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (11:38 IST)
நடிகர் ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வார் என்றும் அதன் பின்பு திடீரென்று அரசியலுக்கு வரவில்லை என்று சொல்வார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தநிலையில் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் மற்றும் பேட்டிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் மதிமுக செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த போது ’ரஜினிகாந்தை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள் நானும் வருவேன் என்று சொல்வார் என்று பின்னர் திடீரென உடல்நிலை சரியில்லை அரசியலுக்கு வரவில்லை என்று சொல்வார் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் சொல்வது அவருக்கும் புரியாது மற்றவர்களுக்கும் புரியாது என்றும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்