காரைக்கால் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (17:31 IST)
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில்  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல அலுவலகங்களில் முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தற்போது சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற ஆட்சியர் முகமது மன்சூர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்