மசினக்குடியில் காட்டுயானை மீது எரியும் டயரை போட்ட நபரை போலீஸார் தேடி வந்த நிலையில் ஒரு ஆண்டு கழித்து சரணடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் கடந்த ஆண்டு யானை ஒன்றை சிலர் மூர்க்கமாக தாக்கியதுடன், எரியும் டயரை அதன் மீது வீசினார்கள். இதனால் யானை உடலில் தீப்பற்றி அது ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதற செய்தது.
காட்டு விலங்குகள் இவ்வாறு கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதி உரிமையாளர் ரிக்கி ரியான் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது சரணடைந்துள்ளார்.