உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் பத்ராதிவியில் உள்ள கொட்டாகொடம் என்ற என்ற பகுதியில் ஒரு இஸ்லாம் பெண்ணிற்கும், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும் தற்போது சவூதி அரேபியாவில் வசித்து வருபவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் கொரோனாவுக்கு அச்சப்பட்டு இந்தியா வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
அதனால், அப்பெண்ணும் அந்நபரும் ஆன்லைனில் இணையம் மூலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.