அனைத்து போராட்டத்தின்போது சமூக விரோத கெடுதல்: மார்க்கண்டேய கட்ஜூ

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (20:53 IST)
அனைத்து பிரபலமான போராட்டத்தின் போதும் சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சிக்கிறது என முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பகுதியில் கூறியுள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு ஆதராவாக போராடி வந்த போராட்டக்காரர்களை இன்று காலை காவல்துறையினர் அடித்து விரட்டியதால் பெரும் கலவரம் ஏற்பட்டது. காவல்துறையினர் அறவழியில் போராடி வந்த இளைஞர்களை அடித்து விரட்டிய சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மார்க்கண்டே கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பிரச்சனையானது, அங்கு அமைப்பு மற்றும் தலைமை கிடையாது. அதுடனைய முடிவு அங்கு ஒழுக்கமில்லை, வெவ்வேறு தரப்பு மக்கள் பல்வேறு திசைகளை நோக்கி இழுத்து செல்கிறார்கள். சில விஷயங்களில் ஒருதரப்பு மக்கள் ஒத்துக்கொண்டால், மற்றவர்கள் உடனடியாக நிராகரிக்கிறார்கள். 
 
அதனுடன், எப்போது எல்லாம் பிரபலமான போராட்டங்கள் நடைபெறுகிறதோ, அப்போது எல்லாம் சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கிறது, கெடுதலை ஏற்படுத்தவும் சில விஷயங்களை செய்கிறது, என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்