தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளே பெற்று பின் தங்கினார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியிலிருந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியதும், கட்சியை பதிய கால அவகாசம் இல்லாததால் சுயேட்சையாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.