சாலையோரம் சாக்குப் பையில் வெட்டப்பட்ட ஆணின் கைகள், கால்கள்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (14:56 IST)
விருதுநகரில் சாலையோரம் வெட்டப்பட்ட நிலையில் ஆணின் கைகள் மற்றும் கால்கள் சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

விருதுநகர் மாவட்டம் அருகே, விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மையிட்டான்பட்டி கிராமம் உள்ளது. அங்கு இன்று காலை சாலையோரம் சாக்குப்பையில் வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் கைகள் மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், அங்கு கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு கிடந்த சாக்குப்பைகளை கைப்பற்றினர். இறந்தவர் யார் என்ற விவரம் குறித்து காவல் துறையினர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வயது ஏறக்குறைய 45 இருக்கலாம் காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்