பேஸ்புக் காதல்..கூகுள் மேப் மூலம் காதலி வீட்டை கண்டுபிடித்து இளைஞரால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:32 IST)
பேஸ்புக் காதல்..கூகுள் மேப் மூலம் காதலி வீட்டை கண்டுபிடித்து இளைஞரால் பரபரப்பு!
பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவரை காதலித்த இளைஞர் லொகேஷனை கண்டுபிடித்து காதலியின் வீட்டுக்கே சென்று திருமணத்திற்கு பெண் கேட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணகிரியை சேர்ந்த நிஷோர் என்பவர் ஃபேஸ்புக் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஷாலியா என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் பேஸ்புக் மூலம் காதலை பகிர்ந்து கொண்ட நிலையில் செல்போன் எண்களையும் பகிர்ந்து கொண்டனர். 
 
இந்த நிலையில் ஷாலியாவின் வீட்டு முகவரியை கேட்ட நிஷோர், அந்த முகவரியை வைத்து கூகுள் மேப்பில் லொகேஷனை கண்டறிந்துள்ளார். இதனை அடுத்து ஷாலியாவின் வீட்டுக்கே சென்று நிஷோர் பெண் கேட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் நிஷோரை ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த இளைஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்