காதலை ஏற்க மறுத்ததால் ரூ.24 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த இளைஞர்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:38 IST)
தனது காதலை ஏற்க மறுத்த இளம் பெண் மீது இளைஞர் ஒருவர் 24 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சிங்கப்பூரை சேர்ந்த கௌசிகன் என்பவர் நோரா என்ற இளம் பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் ஒருவருக்கொருவர் தொழில் சார்ந்த உதவிகளையும் செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌசிகன் தனது காதலை நோராவிடம் வெளிப்படுத்திய நிலையில் நோரா அந்த காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை தொடங்கியது. 
 
இந்த நிலையில் தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண் மீது கோபம் கொண்ட கௌசிகன் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில் தனது காதலை ஏற்காததால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அதனால் ரூபாய் 24 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்