சென்னையக்கு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் தியாகராஜன் மற்றும் சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளன. சத்யா சில ஆண்டுகளாக நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கடந்த 11 ஆம் தேதியன்று, அவர் வீட்டு சமையலறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.