திருவெறும்பூர் திருவேங்கட நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பிட்டராக வேலை செய்யும் ஒருவரும், முத்துக்குமாரும் நீண்ட நாள் நண்பர்கள். இதனால் அவர்களின் குடும்பங்கள் நெருங்கி பழகி வந்தன.
2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், முத்துக்குமார் வீட்டிற்கு நண்பரின் மனைவி சென்றிருந்தார். அப்போது அவர் அளித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை குடித்த பிறகு, அந்த பெண் மயங்கிய நிலையில் இருந்தபோது, முத்துக்குமார் அவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தப் புகைப்படங்களை பயன்படுத்தி, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், பலமுறை அவரை மனவேதனைக்கு உள்ளாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்தார்.
இதனடிப்படையில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இதே போல மற்றொரு பெண்ணையும் முத்துக்குமார் மிரட்டிய தகவலும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்களும் இருந்ததும் தெரியவந்தது.