பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு - ஹெச்.ராஜா டுவீட்

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (17:32 IST)
சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடுகள்  நடந்துள்ளதாக  பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா டுவீட் செய்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ( நகர்ப்புறம்) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் மூலம்  BLC பிரிவின் கீழ் ஒரு பயனாளி தன் வீட்டைக் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் ரூ.2.5 லட்சம் நிதி பெற முடியும்.  இதுகுறித்த PMAY_U – வழிகாட்டுதல்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் இத்திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் சிவங்கை மற்றும் புதுக்கோட்டையில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ALSO READ: ருத்ர தாண்டவம் படத்தை பார்த்து பாராட்டிய ஹெச் ராஜா!
 
இதுகுறிதிது அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடுகள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்  நடந்துள்ளதை ஏற்கனவே பார்த்துள்ளோம்.  எனவே மத்திய அமைச்சர்களின் ஆய்வு அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.

 
Edited by Sinoj

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடுகள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்துள்ளதை ஏற்கனவே பார்த்துள்ளோம். எனவே மத்திய அமைச்சர்களின் ஆய்வு அவசியம்.@annamalai_k @ThamaraiTVTamil @PTTVOnlineNews @polimernews @news7tamil @dinamalarweb @ChanakyaaTv @ThanthiTV

— H Raja (@HRajaBJP) October 18, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்