இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், 5.5 கோடி மக்கள்தொகை, கொண்ட தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகளும், 60 லட்சம் பேர் மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் 4 மொழிகளும், 80 லட்சம் பேர் கொண்ட சுவிட்சர்லாந்தில் 4 மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கின்றன. எனில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருக்கும் 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக மாற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?