வன்முறையை கட்டுபடுத்த காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வன்முறையில் இறந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உளவுத்துறையின் தோல்வியைக் குறிப்பதாகவும், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், சாதி, மதம் இரண்டுமே ஒரு பக்கமும் கூரான கத்திகள் குத்துபவரையும் பதம் பார்க்கும் என்று தெரிவித்துள்ளார்.