2021-ல் திமுக தனித்து போட்டியிடுகிறதா?? பிரஷாந்த் கிஷோர் பிளான் தான் என்ன?

Arun Prasath

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (18:17 IST)
வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என பிரஷாந்த் கிஷோர் வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க பிரஷாந்த் கிஷோரை நியமித்தது.

இந்நிலையில் வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என பிரஷாந்த் கிஷோர் வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி அமைத்தால் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற சீட்டுகளை இழக்க நேரிடும் என பிரஷாந்த் கிஷோர் முக ஸ்டாலினிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

அதே போல், மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கலாம் என்றும், மாவட்டத்தில் ஒரு தொகுதியை இளைஞர் அணிக்கு அளிக்கலாம் எனவும் பிரஷாந்த் வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குற்றப்பிண்ணனி இல்லாதவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்