ரூ.80 கோடி செலவில் போடப்பட்ட தார் சாலை ஒரே ஆண்டில் பாழாகி போனதை எடுத்து மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் முதல் சர்வேயர் காலனி வரை ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு தார் சாலை ஒன்றை போட்டது. இந்த சாலை ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் மதுரை பைபாஸ் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி தோண்டிய குழிகளை மூடாமல் போட்டுச் சென்றதால் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு போடப்பட்ட இந்த சாலை தற்போது குண்டும்குழியுமாக உள்ளது.