கமல் விஸ்வரூபம் எதிரொலி: உணவுத்துறைக்கு எதிராக குவிந்த 2000 மனுக்கள்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (23:52 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களின் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் வேறு வழியில்லாமல் பொறுத்து பொறுத்து இருந்த பொதுமக்கள் இன்று பொங்கி எழுந்துவிட்டார்கள். ஆம், இதற்கு காரணம் கமல் என்றால் அது மிகையில்லை



 
 
ஊழலுக்கு ஆதாரம் கேட்கின்றனர். ஆதாரத்தை அனுப்புங்கள் என்று கமல் கூறிய ஒரே ஒரு வார்த்தை தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை கிளர்ந்தெழ செய்துவிட்டது. மதுரையில் ரேஷன் வினியோக முறைகேடு குறித்து கமல் ரசிகர்கள் 2 ஆயிரம் பேரிடம் புகார் மனுக்களை பெற்று உணவுத்துறை அமைச்சருக்கு அனுப்புகிறார்கள்
 
இதுகுறித்து மதுரை கமல் ரசிகர் மன்ற தலைவர் அழகர் கூறியபோது, 'எங்கள் தலைவர் கமல் ஆணையிட்டுவிட்டார். அதிமுக அரசின் பல்வேறு முறைகேடுகள் குறித்து நாளுக்கு நாள் புகார் மனுக்களை சேகரித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுகும், துறை செயலாளர்களுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த மனுக்களுக்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மக்கள் அவர்களை மாற்றுவார்கள்' என்று கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்