பள்ளிகள் திறப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (13:24 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கல்வியாண்டில் வேஸ்ட் ஆகிவிடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது ஒரு சிறு ஆறுதலை அளித்து வருகிறது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பள்ளிகள் திறப்பது குறித்த உத்தரவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது
 
பள்ளிகளை திறந்த ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்