கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது என்பதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடித்து குதறுவதால் சில உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்த வழக்கில் தெரு நாய்கள் தொல்லை குறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பு உள்ளது.
பொதுமக்கள் தெருநாய்களால் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், தெருநாய்களை கண்டறிந்து அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெருநாய்களால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுவதாகவும் நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் ஏற்படுவதாகவும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் இந்த வழக்கில் கால்நடை துறையின் விலங்குகள் நல வாரிய மதுரை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.