தமிழ்நாட்டில் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த ஏழு நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பரவலாக பெய்யும் என்றும் இன்று முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.