தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்.. கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

Siva

சனி, 31 ஆகஸ்ட் 2024 (13:15 IST)
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு அவர் தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னணியில் ஆறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்றும் 4100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 900 கோடி ரூபாய் முதலீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதனை அடுத்து ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் முதலமைச்சர் பார்வையிட்டதாகவும் தெரிகிறது.

மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்