கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பெண்கள்.. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நிறுத்தம்..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (10:39 IST)
மதுரையில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததை அடுத்து சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சென்னையை அடுத்து மதுரையில் அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 20,000 மேற்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்ற நிலையில் திடீரென கூட்ட நெரிசலில் சிக்கி சில பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதனால் பாதியில் இந்த நிகழ்ச்சியை போலீசார் நிறுத்தினார்  இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்