பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை! – மதுரை கிளை நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:08 IST)
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை நேரில் வர சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பலகாலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சி முறையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வகுப்பறையில் 50% மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக புகார்களும் உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை “மாணவர்களை பள்ளிக்கு வரும்படி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்