ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவர், பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஆடம்பர கடைகளில் ஷாப்பிங் செய்ய தனக்கு போதுமான வசதி இருப்பதாக தோன்றவில்லை என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.
விமான நிலைய கடைகளின் புகைப்படங்களை பகிர்ந்த அவர், இவ்வளவு சம்பாதித்தாலும் அங்கு பொருட்கள் வாங்க தன்னம்பிக்கை வரவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தள பயனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.