ஆன்லைன் கடனால் அதிகரிக்கும் தற்கொலைகள்! – கூகிள், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (09:11 IST)
தமிழகத்தில் ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் அதை தடை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் பலவற்றில் மக்கள் பலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்கும் செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாதவை என்றும், மேலும் அவை சட்டத்திற்கு புறம்பாக மக்களை மிரட்டி பணம் வசூலிப்பதையும் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயலிகளை நீக்குதல் குறித்த விரிவான பதிலை அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கூகிள் நிறுவனத்திற்கு மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்