வாகனங்களில் தலைவர்கள் ஸ்டிக்கர்களை நீக்க உத்தரவு! – கிளை நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (10:34 IST)
தமிழகத்தில் வாகனங்களில் வெளியே தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை நீக்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் வாகன உரிமையாளர்கள் கண்ணாடி வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள், கடவுளர்கள் ஸ்டிக்கரை ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து மதுரை கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் “வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் ஆகியவை ஒட்டப்பட்டிருந்தால், அவற்றை 60 நாட்களில் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட கண்ணாடி, விதிமுறை மீறிய நம்பர் ப்ளேட்டுகளையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்