ஊழியர்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஐடி நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (17:09 IST)
மதுரையைச் சேர்ந்த ஐடி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் அதேபோல் பெண்களுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மதுரையை சேர்ந்த ஸ்ரீ மூகாம்பிகா இன்போசொலியேசன் என்ற நிறுவனத்தில் பல இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கிராமத்தில் இருந்து வருவதாகவும் அவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் சிரம்ப்படுவதாகவும் தெரிகிறது
 
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் தலைவர் செல்வகணேஷ் என்பவர் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரன் பார்த்து தர முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார் 
 
தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு மாப்பிள்ளையும் ஆண் ஊழியர்களுக்கு மணப்பெண்ணும் தாங்களே பார்த்து திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் திருமணம் முடிந்தவுடன் ஊதிய உயர்வு அளிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்