கோவை மாவட்டம் சூலூர் அருகே, கிருஷ்ணகுமார் என்ற நபருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். சங்கீதா கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகுமார் மலேசியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு திரும்பியிருந்தார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மனைவியின் நடத்தையை குறித்து கிருஷ்ணகுமார் சந்தேகப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றபோது, திடீரென கிருஷ்ணகுமாருக்கும் சங்கீதாவுக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், துப்பாக்கி எடுத்து சங்கீதாவை சுட்டுக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.