இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Siva

புதன், 17 ஜனவரி 2024 (07:50 IST)
இன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு இன்று நடைபெறுகிறது. மாடுபுடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் இந்த ஜல்லிக்கட்டுக்காக தயாராக உள்ளனர்.
 
 சிறந்த மாடு மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு கார் பரிசாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: புதுவை கவர்னர் தமிழிசை ட்விட்டர் பக்கம் ஹேக்.. மீட்க போராடும் தொழில்நுட்ப வல்லுனர்கள்..!
 
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் என்ற ஊரில் நடைபெறும் ஒரு பாரம்பரிய மாடுபிடி விளையாட்டு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது இந்த விளையாட்டு நடைபெறும். 
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது.  இதில் பங்கேற்கும் வீரர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. இது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்