மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர்.. 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்..!

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (10:44 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜெய்கா என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில்  இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதால் இன்னும் மூன்று வருடங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்