மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி. தினகரன்

புதன், 16 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
'சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி மற்றும் அவரின் மகள் பிரதிக்‌ஷா ஆகியோர், தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய காட்சி மனதை உறைய வைக்கிறது' என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி மற்றும் அவரின் மகள் பிரதிக்‌ஷா ஆகியோர், தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய காட்சி மனதை உறைய வைக்கிறது.


அரசு மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னை என அனுமதிக்கப்பட்ட குழந்தை, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுளால் கால் அகற்றும் நிலைக்குச் சென்றுள்ளது என்ற தந்தையின் குற்றச்சாட்டிற்கு அரசு மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையில், விசாரணைக் குழுவை அமைத்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருவதால், அரசு மருத்துவமனையின் சிகிச்சை தரம் குறித்து மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருவதை அரசு உணர வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி, மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் ''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்