மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு.. திட்டமிட்டபடி நடக்குமா?

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (11:24 IST)
மதுரையில் அதிமுக மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாடுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சிவகங்கையை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதில் மதுரை விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த பகுதியில் அதிமுக மாநாடுக்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் தடை இன்மை சான்றிதழ் பெறவில்லை. 
 
எனவே மாநாட்டிற்கு பெருமளவு தொண்டர்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்